Today world news |TamilnewsToday Tamil World News – 06.11.2020 | World NewsTamilnewsToday

0
223

தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது vd;W டிரம்ப் குற்றச்சாட்டு
எல்லையை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெறும் பருவநிலைஉச்சி மாநாl;by; fye;J nfhs;s
…பிரதமர் மோடிக்கு miog;G tpLf;fg;gl;bUf;fpd;wJ.
இந்தியாவில் இருந்து செல்லும் வெளிநாட்டினருக்கு சீனா தடை விதித்துள்ளது.ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க – பிபின் ராவத் நடவடிக்கை v
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.90 கோடியாக உயர்வு
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எப்போது ?
நியாயமான முறையில் வாக்குகள் எண்ணப்பட்டால் தன்னால் எளிதில் வெற்றி பெற முடியும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள்
எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும்,
டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.5
சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
முன்னாள் துணை ஜனாதிபதி பிடன் இப்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே
தேவைப்படுகிறது. மறுதேர்தலைக் கோரும் டிரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா(3), ஜார்ஜியா (16), நெவாடா (6),
வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது.
அதிலும் குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் டிரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில்
முன்னிலை வகித்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வருகிறார்.
இதனால் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக பிரச்சாரக்குழு கூறுகிறது.
பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரியவந்துவிடும் என்று மாநில செயலாளர்
கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர். அதே நேரம் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும்
, இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.
#Worldnews #Tamilnews #NU

source